The preparation of this chutney is easy. Pl. follow procedure given below :
"புதினா-கொத்துமல்லி சட்னி"
தேவையானவை :
புதினா இலை - 2 கப்
கொத்துமல்லி - 2 கப்
இஞ்சி - ஒரு துண்டு
பெரிய வெங்காயம் - 2
எண்ணெய் - கால் கப்
பூண்டு - 10 பல்
புளி - பட்டாணி அளவு
பச்சை மிளகாய் - 4
சீரகம் - 1 தேக்கரண்டி
உப்பு - சிறிது
செய்யும் முறை
புதினா மற்றும் கொத்துமல்லியை தண்ணீரில் அலசி வைக்கவும்.
இஞ்சி, பூண்டை தோலுரித்து வைக்கவும். வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கவும். பச்சை மிளகாயின் காம்பினை நீக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு புதினா மற்றும் கொத்துமல்லி, இஞ்சி, பூண்டு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை வதக்கிக் கொள்ளவும்.
வதக்கியவற்றை சிறிது உப்பு, புளி வைத்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
எண்ணெயில் சீரகம் தாளித்து இந்த சட்னியில் ஊற்றிக் கிளறி பரிமாறவும்.
====================================================================
'Bharatheeyan-Santhosham'
Sunday, May 9, 2010
லைட் டிபன் ஐடேம்ஸ்
{Thanks to 'AvaL Vikatan' for these tips}
(1)டோக்ளா
தேவையானவை: இட்லி மாவு - ஒரு கப், கடலை மாவு - 2 கப், சர்க்கரை - 1 டீஸ்பூன், ட்ரை ஈஸ்ட் (டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் கிடைக்கும்) - கால் டீஸ்பூன், வெதுவெதுப்பான பால் - கால் கப், நெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: காய்ச்சிய வெதுவெதுப்பான பாலில், ஈஸ்ட்டை சேர்த்து 2 நிமிடங்கள் வைக்கவும். கடலை மாவுடன் ஈஸ்ட் கலந்த பால், இட்லி மாவு சேர்த்துக் கலந்து, உப்பு சேர்க்கவும். இட்லி மாவு பதத்திலேயே இருக்கும்படி தண்ணீர் சேர்த்துக் கலந்து கொள்ளவும். ஒரு தட்டில் நெய் தடவி மாவை விட்டு நிரப்பி, ஆவியில் வேக வைத்து எடுக்கவும். சூடான நீரில், சர்க்கரையைக் கரைத்து அதன் மேல் தெளித்து, சிறு சிறு பீஸ்களாக நறுக்கினால் டோக்ளா ரெடி.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பச்சை மிளகாய், கொத்தமல்லி தாளித்து, அதனை ‘கட்’ செய்த டோக்ளாக்களின் மேல் பரவலாகப் போட்டுப் பரிமாறவும்.
(2)மைதா போண்டா
தேவையானவை: மைதா மாவு - ஒரு கப், தயிர் - அரை கப், அரிசி மாவு - 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய பச்சை மிளகாய் - 3, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: தயிருடன் மைதா மாவு, அரிசி மாவு, தேங்காய் துருவல், நறுக்கிய பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து 10 நிமிடம் ஊற விடவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சிறு கரண்டியால் கலந்த மாவை எடுத்து எண்ணெயில் விடவும். சிவக்க வெந்ததும் எடுத்துப் பரிமாறவும்.
(3)டிக்கி
தேவையானவை: நறுக்கிய உருளைக்கிழங்கு - ஒரு கப், பிரெட் துண்டுகள் - 4, நறுக்கிய வெங்காயம் - கால் கப், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன், பாசிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பாசிப்பருப்பை முக்கால் பதத்தில் வேக வைத்து தண்ணீரை வடிக்கவும். கடாயில் சீரகம் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கி, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். வேக வைத்த பாசிப் பருப்பை அதில் சேர்த்து நன்கு வதக்கி எடுத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து, மசித்துக் கொள்ளவும்.
பிரெட் துண்டுகளை தண்ணீரில் நனைத்துப் பிழிந்து கொள்ளவும். வேக வைத்து மசித்த உருளைக்கிழங்குடன் கொத்தமல்லி, கரம் மசாலாத்தூள், நனைத்த பிரெட் துண்டுகள், உப்பு சேர்த்துப் பிசைந்து, சிறுசிறு உருண்டைகளாக செய்து வைத்துக் கொள்ளவும். இந்த உருண்டைகளுக்குள் பாசிப்பருப்பு கலவையை கொஞ்சம் கொஞ்சமாக வைத்து, விரும்பும் வடிவத்தில் செய்து கொள்ளவும். அதனை தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு, சிவந்ததும் எடுத்துப் பரிமாறவும்.

Subscribe to:
Comments (Atom)